பூமியில் இருந்து 19 மில்லியன் மைல் தொலைவில் இருந்து அதிக தரத்துடன் கூடிய பூனையின் வீடியோவை நாசா
வெற்றிகரமாக பூமிக்கு அனுப்பிவைத்துள்ளது.
வியாழன் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு நடுவில் இருக்கும் ஒரு மர்மமான எரிக்கல்லை ஆய்வு செய்வதற்காக
விண்வெளியில் பயணிக்கும் விண்கலமானது, பூமியில் இருந்து 19 மில்லியன் மைல் தூரத்தில் உள்ளது.
இந்த விண்கலத்தில் இருந்து லேசர் மூலம் முதன்முறையாக 15 விநாடிகள் கொண்ட பூனையின் வீடியோ பூமிக்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் விண்வெளியின் ஆழமான பகுதியில் இருந்தும் பூமிக்கு அதிக தரத்துடன் கூடிய வீடியோவை அனுப்ப
முடியும் என்பதை உறுதி செய்துள்ளனர்.
இந்தநிலையில் விண்வெளியில் இருந்து பெறப்பட்ட வீடியோவை நாசா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது. அதில், டாட்டெர்ஸ் என பெயரிடப்பட்ட ஒரேஞ்சு நிற பூனை ஒளியை தொடர்ந்து விளையாடும் வீடியோ இடம்பெற்றது.
முதல் வீடியோவில் பூனை 1920களில் அமெரிக்காவின் ஒளிபரப்பு தொடக்க நிலையில் இருந்தது. அப்போது
சோதனைக்காக பெலிக்ஸ் பூனையின் சிலை ஒளிபரப்பப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே விண்வெளியில் இருந்து
அனுப்பிய வீடியோவிலும் பூனை காட்சிப்படுத்தப்பட்டதாக கூறியுள்ளனர்.
Discussion about this post