இலங்கை வான்பரப்பில் பாரிய வளைய வடிவிலான ஒளி வட்டம் தோன்றியுள்ளது.
இதைப் பொது மக்கள் மற்றும் குழந்தைகள் ஆர்வத்துடன் உற்று நோக்கியுள்ளனர்.
நேற்று (22.12.2023) மாலை சுமார் 7.00 மணி முதல் இலங்கையின் பல பாகங்களிலும் இந்த ஒளி வட்டம் தோன்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் முழு வட்டப் பரிமாண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. அதாவது வளிமண்டலத்தில் ஈரப்பதம் அல்லது வளிமண்டலத்தில் நீராவியின் அளவு அதிகரிக்கும் போது, தெளிவான வானத்திலும், நிலவு நன்றாக இருக்கும் நாளிலும் இவ்வாறான ஒளி வட்டம் தோன்றும் என கூறப்படுகின்றது.
மேலும் சூரிய ஒளி நிலவின் மீது விழுகிறது, அந்த ஒளி பூமியை அடையும் போது, வளிமண்டலத்தில் உள்ள நீராவி ஊடாக செல்லும் போது ஒளி வட்டம் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post