யுவதி ஒருவருக்காக இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் நால்வர் வெட்டுக்காயத்துக்கு
உள்ளாகியுள்ளதாக மில்லனிய பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை – மில்லனிய பிரதேசத்தில் இந்த சம்பவம்
இடம்பெற்றுள்ளது.
இவர்கள் மில்லனிய, பெல்லன்துடாவ பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையமொன்றிற்கு
முன்பதாக வாள் மற்றும் மன்னா போன்ற ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் மேலும்
தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.
Discussion about this post