சீனாவின் வடமேற்கு பகுதியில் பூகம்பம் தாக்கியதில் 111 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
200க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
சீனாவின் வடமேற்கு பகுதியின் கன்சு மாகாணத்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த நாட்டின் அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது.
இதனால் சீனாவின் கன்சு மற்றும் அதன் அண்ட மாகாணமாக கிங்காய் ஆகிய மாகாணங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
தொடர்ந்தும் மீட்பு பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சில கிராமங்களிற்கான மின்விநியோகமும் நீர் விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Discussion about this post