சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் அனைத்து அரசியல் தலைவர்களும் பொறுப்புடன் செயற்படுமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக் கொண்டுள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்று (17) கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு குறித்த வேலை திட்டத்தை நிராகரிக்கும் அனைவரும் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்றுவதற்கான நடைமுறை முன்மொழிவுகளை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அதிபர் ரணில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொறுப்புக்களை ஏற்காமல் மக்களை மகிழ்விப்பதற்காக மட்டும் அறிக்கைகளை வெளியிடும் அரசியலானது நாட்டை மீண்டும் பொருளாதார பாதாளத்திற்கு இழுத்துச் செல்லும் எனவும் அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்
அதேவேளை, பெரிய கண்டி அபிவிருத்தித் திட்டத்தின் இறுதி வரைவு அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post