கனடாவில் வீடற்றவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
முக்கியமான நகரங்கள் பலவற்றில் வீடற்றவர்கள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு வீடற்றவர்கள் தற்காலிக முகாம்கள் அல்லது கூடாரங்களில் தங்கி இருப்பதாகவும் இவர்கள் பல்வேறு விபத்துக்களை சந்திப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக முகாம்கள் மற்றும் கூடாரங்களில் தீ விபத்து சம்பவங்கள் பதிவாகின்றன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்பொழுது நாட்டில் நிலவி வரும் கடும் குளிரான காலநிலையின் மத்தியில் இந்த பிரச்சனை அதிகரித்துள்ளது.
உரிய கட்டமைப்பை கொண்டிராத கூடாரங்கள் மற்றும் முகாம்களில் குளிரை கட்டுப்படுத்துவதற்காக மூட்டப்படும் தீ, விபத்துக்களாக மாறி விடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடா முழுவதும் சுமார் மூன்று லட்சம் பேர் வீடற்றவர்களாக வாழ்ந்து வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
எனவே இந்த விடயம் தொடர்பில் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
Discussion about this post