கனடா தலைநகர் ஒட்டாவாவில் அரிதான நிலைமையுடன் இதய நோயாளிகள் மருத்துவமனையை நாடுவதாக ஒட்டாவா இதய நோய் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இது பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசி தொடர்பான எதிர்வினையாக இருக்கலாம் என மருத்துவர்கள் தரப்பால் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 8 நோயாளிகள் ஒட்டாவா பல்கலைக்கழக இதய மருத்துவமனையை நாடியுள்ள நிலையில், அவர்கள் அனைவருக்கும் ஒரே அறிகுறிகள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
மார்பு வலி, சுவாசிப்பதில் சிக்கல் மற்றும் மார்பில் அழுத்தத்தின் உணர்வுகள் என தெரிவித்துள்ளனர். மேலும் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க, இந்த நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர் Peter Liu தெரிவித்துள்ளார்.
ஒட்டாவாவை பொறுத்தமட்டில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 100,000 பேர்களில் 34 பேர்களுக்கு மட்டுமே பாதகமான நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்ட 30 வயதுக்கு குறைவான இளைஞர்களுக்கே இதுபோன்ற இதய வீக்கம் ஏற்பட்டு வருகிறது. இருப்பினும், மிக வேகமாக அவர்கள் குணமடைவதாகவும் மருத்துவர் Peter Liu தெரிவித்துள்ளார்
Discussion about this post