இஸ்ரேல்- ஹமாஸ் போர் தொடர்ந்துவரும் நிலையில் சமீபத்தில் வெளியாகியுள்ள இஸ்ரேல் வீரர்களின் காணொளி
இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த காணொளி இஸ்ரேலிய வீரர்கள் காஸாவில் உள்ள பொம்மை கடை ஒன்றைத் தகர்ப்பதும் பொம்மைகளின்
தலையைத் துண்டிப்பதும் கைவிடப்பட்ட உணவு மற்றும் குடிநீர் டிரக்கை தீயிட்டு கொளுத்துவதுமான காட்சிகள்
இடம்பெற்றுள்ளன.
வெறுப்பு பிரசாரப் பாடல்களைப் பாடி இஸ்ரேல் வீரர்கள் வட்டமாக நடனமிடுவது போலான காணொளி சர்வதேச
அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் வீரர்கள் இவ்வாறு பொருத்தமில்லாது தீங்கிழைக்கும் வகையில் நடந்து கொள்வது இது முதல் முறை இல்லை.
எனினும், சமீபத்திய காணொளி தேசத்தின் ஒட்டுமொத்த மனநிலையைக் காண்பிப்பதாக உள்ளதாகத்
தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து இஸ்ரேலிய மனித உரிமைகள் செயல்பாட்டாளர் டிரார் சடோட் , “மனிதநேயமற்ற தன்மை தலைவர்களிடம் இருந்து வீரர்களுக்குக் கடத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
ஒரு இஸ்ரேல் வீரர் காஸாவின் வீட்டிற்குள் நுழைந்து அலுமாரிகளில் உள்ள உள்ளாடைகளைப் படமெடுக்கிற விடியோ ஒன்றும் மற்றொரு வீரர் இஸ்லாமியர்களின் வழிபாட்டுக்கான விரிப்புகளைக் கழிவறையில் தூக்கி வீசுகிற காணொளி வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Discussion about this post