கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் ரொறன்ரோவில் தொலைபேசிகளை தடை செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
ரொறன்ரோ பாடசாலை சபையினால் இது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த யோசனைத் திட்டத்தை வரவேற்பதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி, சுகாதாரம் மற்றும் விசேட கல்வித் தேவைகளுக்கு மட்டும் செல்பேசி பயன்படுத்தப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
எனினும் தற்பொழுது அதிகளவில் சமூக ஊடகப் பயன்பாடு உள்ளிட்ட பல காரணிகளினால் செல்பேசிகளினால் பாதக விளைவுகள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக இளம் தலைமுறையினரின் உளச்சுகாதாரம் வெகுவாக பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே பாடசாலைகளில் செல்பேசி பயன்பாட்டை மட்டுப்படுத்த அல்லது தடை செய்ய நடவடிக்கை எடுப்பது குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாக ரொறன்ரோ பாடசாலை சபை தெரிவித்துள்ளது.
Discussion about this post