வனுவாட்டு நாட்டில் உள்ள பகுதியில் 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவி அறிவியல்களுக்கான ஜெர்மன் ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.
நிலநடுக்கத்தையடுத்து குறித்த பகுதியில் உள்ள கடற்கரைகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக குறித்த பகுதியில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.
வனுவாட்டு மற்றும் நியூ கலிடோனியா கடற்கரைகளில் நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கி.மீ தொலைவில் நிலநடுக்கத்தால் அபாயகரமான சுனாமி அலைகள் எழக்கூடும் என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.
Discussion about this post