கனடாவில் குறுகிய கால வீட்டு வாடகை திட்டம் தொடர்பில், டெஸ்ஜார்டின் என்ற நிதி நிறுவனம் பொதுமக்களுக்கு முக்கிய தகவலொன்றினை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், குறுகிய கால வாடகைத் திட்டத்தினால், வீட்டு வாடகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
கனடாவில் மட்டுமன்றி உலகம் முழுவதிலும் குறுகிய கால வீட்டு வாடகை திட்டத்தினால் வாடகைத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்வாடகை திட்டத்தின் எதிர்மறை விளைவுகள் குறித்து விபரிக்கப்பட்டுள்ளதோடு, இதனால் வீட்டு உரிமையாளர்கள் அதிகளவு லாபமீட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டமானது வாடகை குடியிருப்பாளர்களுக்கு பெரும் நெருக்கடியாக அமைந்துள்ளதாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post