கனடாவில் வெளிநாட்டு மாணவர்கள் தொழில்களில் ஈடுபடுவதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளது.
வரையறுக்கப்பட்ட நேரத்திற்கு மட்டுமே தொழில்களில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. மாணவர் வீசாவில் கடாவிற்கு சென்ற மாணவர்களுக்கு இவ்வாறு வரையறை விதிக்கப்பட உள்ளது.
ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட குறித்த வரையறைகள் மீண்டும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. எனினும், தொழிலில் ஈடுபடுவதற்கான வரையறைகள் வெளிநாட்டு மாணவர்களை பெருமளவில் பாதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
வரையறுக்கப்பட்ட நேரத்தில் தொழில் புரிவதனால் வகுப்பு கட்டணத்தை செலுத்த முடியாத நிலை உருவாகும் எனவும், வாழ்க்கைச் செலவு பிரச்சினையும் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தொழிற்சந்தையில் காணப்பட்ட பற்றாக்குறை காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சர்வதேச மாணவர்கள் தொழில்களில் ஈடுபடுவதற்கான வரையறை நீக்கப்பட்டது.
நாட்டில் நிலவிய ஆளணி வளப்பற்றாக்குறை காரணமாக இவ்வாறு வரையறை தற்காலிகமாக நீக்கப்பட்டது.
Discussion about this post