வடகொரியாவானது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அமெரிக்காவிலிருந்து விடுக்கப்பட்ட அழைப்பை வட கொரியா நிராகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடகொரிய ஜனாதிபதியின் சகோதரி கிம் யோ-ஜாங் இந்த அழைப்பை நிராகரித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாது,
ஒரு சுதந்திர நாட்டின் இறையாண்மை என்பது பேச்சுவார்த்தையின் மூலம் சமரசம் செய்துகொள்ளக்கூடியது இல்லை. எனவே, அதற்காக அமெரிக்கா விடுக்கும் அழைப்பை ஒருபோதும் ஏற்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் தனது உளவு செயற்கைக்கோளை வட கொரியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த செயற்கைகோள் விவகாரம் தொடர்பில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வட கொரியாவுக்கு அழைப்பு விடுத்து இருக்கலாம் என சுட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post