அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள ரெயின்போ பாலத்தில் கார் ஒன்று வெடித்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
ரெயின்போ பாலம் ஒன்டாரியோவை நியூயார்க்குடன் இணைக்கும் 4 எல்லைக் கடப்புகளில் ஒன்றாகும். இந்நிலையில், நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள அமெரிக்கா-கனடா எல்லை சோதனைச் சாவடியில் கார் ஒன்று வந்தது.
இதன்போது கார் திடீரென வெடித்ததில் 2 பேர் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாலத்தின் எல்லையில் ஒரு வாகனம் வெடித்த சம்பவம் ‘பயங்கரவாத தாக்குதல்’ முயற்சியாக இருக்கலாம் என்ற கோணத்தில் எப்.பி.ஐ. விசாரித்து வருவதாக தகவல்க வெளியாகி உள்ளது.
இதுகுறித்து நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோகுல் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நயாகரா நீர்வீழ்ச்சியில் உள்ள ரெயின்போ பாலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை அதிகாரிகள் நெருக்கமாக கண்காணித்து வருகின்றதாக பதிவிட்டுள்ளார்.
Discussion about this post