அவுஸ்திரேலிய அரசாங்கம் காசா விவகாரத்தில் யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்காதமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிறீன்ஸ் கட்சியினர் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
இந்நிலையில் நேர்மையற்ற வார்த்தைகள், யுத்த குற்றங்களை தடுக்க உதவப்போவதில்லை என கிறீன்ஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மெஹ்றீன் பாருக்கி தெரிவித்துள்ளார்.
அத்துடன் மக்கள் எதிர்ப்பை நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்போவதாக தெரிவித்துள்ள அவர் சுதந்திர பாலஸ்தீனம் என கோசம் எழுப்பினார்.
இதன் பின்னர் கிறீன்ஸ்கட்சியின் செனெட்டர்கள் 11 பேரும் வெளிநடப்பு செய்த நிலையில் ஜெனெட் ரைஸ் பாலஸ்தீன கொடியை தூக்கி காண்பித்தமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post