காசா மீதான போரை நிறுத்த வலியுறுத்தி வரும் ஜோர்டான், இஸ்ரேலிலுள்ளதனது நாட்டு தூதுவரை வெளியேறுமாறு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் போரை நிறுத்தி “அது ஏற்படுத்திய மனிதாபிமான நெருக்கடியை” முடிவுக்குக் கொண்டுவந்தால் மட்டுமே தூதுவர் டெல் அவிவ் திரும்புவார் என்று ஜோர்டான் வெளியுறவு அமைச்சு மேலும் கூறியது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் வெளியேறிய ஜோர்டானிலுள்ள இஸ்ரேல் தூதுவர் அதே நிபந்தனைகளின் பேரில் மட்டுமே திரும்ப அனுமதிக்கப்படுவார் என்று ஜோர்டான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை காசா மீதான தாக்குதல்களால் பொலிவியா இஸ்ரேலுடனான உறவை துண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெருகிவரும் மனிதாபிமான நெருக்கடி தொடர்பாகவும் காசா மீதான அளவில்லாத தாக்குதலாலும் இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதாக பொலிவியா அறிவித்துள்ளது.
Discussion about this post