இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் பலஸ்தீன போராளிகளை இஸ்ரேல் தேடி வேட்டையாடி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்கும் பலஸ்தீன ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே தொடங்கிய போர் தீவிரமடைந்துள்ளது. இதுவரை பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் 110 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், 29லிருந்து 31 வரை வயதுடைய 3 பேர் இன்று அதிகாலை நேரத்தில் பலஸ்தீனத்தின் ரமல்லா பகுதியின் வடமேற்கிலுள்ள பெய்ட் ரிமா, நப்லு பகுதியில் உள்ள அஸ்கர் அகதிகள் முகாம் மற்றும் வடக்கே உள்ள டுபாஸ் நகர் ஆகிய 3 இடங்களில் இஸ்ரேல் இராணுவ படையினரால் கொல்லப்பட்டனர்.
மூன்று இடங்களிலும் ஹமாஸ் அமைப்பினரை தேடும் முயற்சியில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டு வந்தது. இதில் மறைவிடங்களில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் ராணுவத்தினர் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்கினர்.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் இந்த மூவரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் சுகாதார துறை அறிவித்திருக்கிறது.
Discussion about this post