தளபதி விஜய் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் உலகளவில் வெளிவந்த திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தை லலித் குமார் தயாரித்திருந்தார்.
மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாக பின்தங்கி இருந்தாலும், வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
அரபு நாடுகள், கர்நாடகா, கேரளா, ஹிந்தி, சிங்கப்பூர், ஆந்திரா மற்றும் தெலுங்கானா போன்ற இடங்களில் தன்னுடைய லாப கணக்கை லியோ படம் துவங்கிவிட்டது.
உலகளவில் இதுவரை ரூ. 450 கோடி மயில்கல்லை கடந்து இருக்கும் லியோ படம் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது
அதன்படி, ஒரு வாரத்தில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 155 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாஸ் காட்டியுள்ளது. இனி வரும் நாட்களில் லியோ படத்திற்கு எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
Discussion about this post