ஹமாஸ் தீவிரவாதிகள் ஒட்டுமொத்த உலகிற்குமே அச்சுறுத்தல் என கனடா தெரிவித்துள்ளது.
கனடிய பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேயர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ஹமாஸ் தீவிரவாதிகளை இல்லாதொழிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தீவிரவாதிகள் போர் நிறுத்தத்தை மதித்து செயல்படுவார்கள் என்பதில் கனடாவிற்கு நம்பிக்கை இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தீவிரவாத இயக்கம் ஒன்று சர்வதேச சட்டங்களை மதித்து போர் நிறுத்தத்திற்கு உடன்படும் என நம்பிக்கை கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
உலகின் பல்வேறு நாடுகள் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் கனடாவில் ஹமாஸ் இயக்கம் தீவிரவாத இயக்கமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post