வாழ்க்கைச் சுமை அதகரிப்பை தாங்க முடியாது, அதன்படி ரூ. 20,000 கொடுப்பனவு கோரி போராட்டமொன்றை ஆரம்பிக்க அகில இலங்கை போக்குவரத்து ஊழியர் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, குறித்த போராட்டம் இன்றுநண்பகல் 12 மணிக்கு கர்லயால, பிடகெட்டாவ மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடத்தப்படவுள்ளது.
எரிபொருள், நீர் கட்டணங்கள் தாங்க முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளதாகவும், உணவு மற்றும் பானங்களின் விலைகளும் அபரிமிதமாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை போக்குவரத்து ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
Discussion about this post