கனேடியப் பிரஜைகள், கரீபியன் தீவுகளுக்கான பயணங்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மிகவும் அத்தியாவசியமான தேவைகளை தவிர்த்து, கரீபியன் தீவுகளுக்கு பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனேடிய வெளிவிவகார அமைச்சு இது குறித்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணிகளின் அடிப்படையில் இவ்வாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கரீபியன் தீவுகளின் கிழக்கு பிராந்தியத்திய வலயத்தில் பலத்த புயல் காற்று தாக்கம்; காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த புயல் காற்று தாக்கதிற்கு டெமி என பெயரிடப்பட்டுளு;ளது.
மேலும், சில பகுதிகளில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் மழை வீழ்ச்சி 72 முதல் 254 மில்லி மீட்டர் வரையில் காணப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கரீபியன் தீவுகளுக்கான அத்தியவசியமற்ற பயணங்கள் தவிர்க்கப்பட வேண்டுமென நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
Discussion about this post