கனடாவில் மீண்டும் கொவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கனேடிய பொதுச்சுகாதார அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த குளிர்காலத்தில் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்ததனை போன்று மீளவும் ஓர் அலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த முதலாம் திகதி தொடக்கம் 7ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 10218 புதிய கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கடந்த 10 திகதி வரையிலான காலப்பகுதியில் கொவிட் தொற்று காரணமாக சுமார் 3800 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் பாரிய அளவிலான கொவிட் தொற்று அலையொன்று ஏற்படுவதற்கான சாத்தியம் குறைவு எனவும் அதற்காக உதாசீனமான போக்கினை பின்பற்றக் கூடாது எனவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post