கனடாவில் வீட்டு உரிமையாளர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அடகு கடன் அடிப்படையில் வீடுகளை கொள்வனவு செய்துள்ள வீட்டு உரிமையாளர்கள் பல்வேறு நெருக்குதல்களை எதிர்கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக அடகு கடன் வட்டி வீத அதிகரிப்பு காரணமாக வீட்டு உரிமையாளர்கள் வீடுகளை விற்பதற்கு முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கூடுதல் அளவில் வட்டி வீதம் காணப்படும் காரணத்தினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தங்களது வீடுகளை விற்பனை விடவும் வேறும் செலவு குறைப்பு நடவடிக்கைகளின் ஊடாக இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என பொருளியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
நுகர்வு செலவுகளை வரையறுப்பதன் மூலம் அடகு கடன் வட்டி கொடுப்பனவுகளை செலுத்தக்கூடிய பின்னணியை உருவாக்கிக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளனர்.
பல வீட்டு உரிமையாளர்கள் மாதாந்த அடகு கடன் கொடுப்பனவு செலுத்துகையில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Discussion about this post