பெல்ஜியத்தில் நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கிசூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதை அறிந்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிர்ச்சியடைந்து கலங்கமாக தனது இரங்கல்களை தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் நடந்த சுவீடன்-பெல்ஜியம் காற்பந்து போட்டியொன்றினை காண ஏராளாமான இரசிகர்கள் குழுமியிருந்தனர்.
இந்தநிலையில், சில இரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத நபர் ஒருவர் அவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிசூடு நடத்தியுள்ளார்.
இதன்போது தகவலை அறிந்த கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட குறித்த டுவிட்டர் பதிவில், இரு இரசிகர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என தெரியவந்த செய்தியால் நான் அதிர்ச்சியடைந்து கலக்கமடைந்தேன், மேலும் யாருடைய அன்புக்குரியவர்கள் அர்த்தமற்ற முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறப்பட்டுள்ளது.
மேலும், கனேடியர்கள் நாம், பெல்ஜியம் மற்றும் சுவீடன் நண்பர்களுக்காக உடன் நிற்கிறோம் அத்தோடு உலகெங்கிலும் உள்ள மக்களுடனும் வெறுப்பு மற்றும் வன்முறைக்கு எதிராக நிற்கிறோம் என கூறியுள்ளார்.
Discussion about this post