தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை உத்தியோகபூர்வமாக இன்று (14) ஆரம்பமானது.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து வருகை தந்த கப்பல் 50 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் காங்கேசன்துறையை மதியம் 12.20 மணியளவில் வந்தடைந்தது.
செரியாபாணி கப்பலின் வரவேற்பு நிகழ்வில் கப்பல்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், யாழ் இந்திய துணை தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மதியம் 1.15 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்தில் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் பச்சை கொடி அசைத்து மீண்டும் இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகம் நோக்கி 31 பயணிகளுடன் கப்பல் புறப்பட்டது.
Discussion about this post