சுவுதி அரேபியாவில் உள்ள தம்மாம் துறைமுக விமான நிலையத்தில் இருந்து பயணம் செய்யவிருந்த தமிழக பயணியிடம், அதிகாரிகள் பெட்டியில் என்ன இருக்கிறது என்று கேட்டதற்கு, பெட்டியில் வெடிக்குண்டு இல்லையென பதிலளித்ததால் அவரை கடுமையான சோதனைக்கு உள்ளாக்கி கைது செய்துள்ளனர்.
இதேவேளை அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விசாரணை நடத்தியபோது, பாதுகாப்பு பணியாளர்களிடம் சரியாக ஒத்துழையாதது, தவறான நடத்தை காரணமாக 1 மாத காலம் சிறைத்தண்டனையும், தொடர்ந்து நாடு கடத்தவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் தென்னிந்தியாவின் பிரபல பாடகி சின்மயி ஸ்ரீபதா அவர் முகநூலில் பதிவொன்றை ஈட்டுள்ளார்.
குறித்த பதிவு இதோ!
பல பேருக்கு தான் கவுண்டமணின்னு நினைப்பு. எத கேட்டாலும் நக்கலடிச்சா அவர போல பெரிய்ய நடிகன் ஆகிடலாம்னுற நெனப்பு கேசுங்க.
ஒரு முழு தலைமுறையில் உள்ள பலபேரோட அணுகுமுறை இப்படித்தான்; கேள்வி கேட்டா பதில் சரியா வரவே வராது. இப்படி பேசாதன்னு பெரியவங்க சொன்னாலும் கேக்கமாட்டனுங்க.
அடி பட்டா புத்தி வரும்னு சும்மாவா சொன்னாங்க. எங்க எத பேசணும்னு தெரியாம விமான நிலையத்துல வெடிகுண்டு ஜோக் அடிச்சாப்லையாமாம். எத்தன காசு செலவழிச்சு, பெத்தவங்களோட நகையை விற்று எந்த ஏஜண்டுக்கு காசு குடுத்து இந்த வாய்ப்பு வந்துச்சோ. என அவர் கருத்தாக பதிவிட்டுள்ளார்.
Discussion about this post