இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பிடம் இருந்து மகனை காப்பாற்றுவதற்காக தாய் மற்றும் தந்தை இருவரும் தங்களது உயிரை கொடுத்துள்ளனர்.
கடந்த 7 ஆம் திகதி முதல் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து, இஸ்ரேல் போரை அறிவித்து, இரு தரப்பினருக்கும் இடையே 3 நாள்களாக மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள ஷ்லோமி மத்தியாஸ், அவரது மனைவி டெபோரோ மற்றும் அவர்களின் 16 வயது மகன் ரோத்தம் ஆகியோர் ஹமாஸ் அமைப்பின் துப்பாக்கி தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக ஒரு அறையில் பதுங்கி இருந்துள்ளனர்.
இதன் போது, தொடர்ந்து தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர் இவர்கள் பதுங்கி இருந்த இடத்திற்கு கதவை உடைத்து கொண்டு வந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
அப்போது பெற்றோர் இருவரும் மகன் மீது போர்வை போல் படுத்துக் கொண்டனர். இதனால், பெற்றோர் இருவரின் மீதும் குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
அத்தோடு 16 வயது மகன் வயிற்றின் மீது துப்பாக்கிக்குண்டு பாய்ந்ததையடுத்து, சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பற்றப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Discussion about this post