இலங்கை பெண் ஒருவர் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான மோதலில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காயமடைந்திருந்த குறித்த பெண் காணாமல் போயுள்ளார் என தேடப்பட்ட நிலையில் சடலமாகவே மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அனுலா ஜயதிலக்க என்ற குறித்த பெண் இஸ்ரேலில் வயதான பார்வையற்ற பெண்ணை பராமரித்து வந்தவர் என தெரியவந்துள்ளது.
மேலும் அவர் பணியாற்றிய இடத்தின் உரிமையாளர் குறித்த பெண் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக முகப்புத்தகத்தில் (பேஸ்புக்கில்) பதிவிட்டுள்ளனர்.
அந்த முக புத்தக பதிவில், அனுலா எனது மறைந்த அத்தை அலிசாவின் பராமரிப்பாளராக இருந்தார்.
அர்ப்பணிப்பு மற்றும் அன்பான இதயத்துடன், வீட்டில் உள்ள பூனைகளையும், அநேகமாக பறவைகள் மற்றும் பிற உயிரினங்களையும் கவனித்துக்கொண்டார்.
என் அத்தையின் மறைவுக்குப் பிறகு, அவர் கிப்புட்ஸ் பீரியில் தொடர்ந்து வசித்து வந்தார். இந்த நிலையில் இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் குடும்பத்தினருக்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post