இலங்கையில் பொதுப் போக்குவரத்தில் பயணிப்பது, தங்களது உயிருக்கு மிகவும் ஆபத்தானது என ரஷ்ய சுற்றுலா பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர் தனது மோசமான பயண அனுபவத்தை பொலன்னறுவை சுற்றுலா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடாக பதிவு செய்துள்ளார்.
இந்த பயணம் குறித்து அவர் தெரிவித்ததாவது,
நாட்டின் அழகைக் காண கொழும்பில் இருந்து பொலன்னறுவைக்கு பேருந்தில் வந்ததாக குறித்த ரஷ்ய சுற்றுலாப் பயணி கூறினார்.
பேருந்து 95Kmph வேகத்தில் சென்றது. சில சமயங்களில் பிரதான சாலையில் 100kmph ஐ தாண்டியது. நான் எனது கூகுள் மப் செயலியின் மூலம் பஸ்ஸின் வேகத்தை பதிவு செய்தேன்.
ஓட்டுநரிடம் மெதுவாக வாகனத்தை செலுத்துமாறும் எங்களைப் பாதுகாப்பாக பொலன்னறுவைக்கு அழைத்துச் செல்லுமாறும் சொன்னேன்.
ஆனால் அவர் அதை செவிமடுக்கவோ அதைப்பற்றிப் பேசவோ இல்லை பேருந்து பக்கவாட்டில் வளைத்து அலட்சியமாக மற்ற வாகனங்களை வேகமாக முந்தி சென்றது.
இப்போது நான் கண்டிக்கு செல்ல வேண்டும், கண்டிக்கு எங்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லக்கூடிய ஒரு சாதாரண சாரதியுடன் கூடிய பேருந்து எனக்கு தேவை. 100Kmph வேகத்தில் செல்லும் பைத்தியக்காரன் போன்ற சாரதி வேண்டாம்” என்று பெண் சுற்றுலாப் பயணி கூறினார்.
அதேவேளை இலங்கையில் பேருந்துகளில் பயணம் செய்வது மிகவும் ஆபத்தானக இருக்கின்ற நிலையில், தொடருந்து நேர அட்டவணையைக் கண்டுபிடிப்பது கூட மிகவும் கடினமாக இருக்கிறது ” என்று அவர் முறையிட்டுள்ளார்.
Discussion about this post