இன்றைய ராசிபலன் அக்டோபர் 03, 2023, சோபகிருது வருடம் புரட்டாசி 16 செவ்வாய்க்கிழமை, சந்திரன் ரிஷப ராசியில் உள்ள கிருத்திகை, ரோகிணி சஞ்சரிக்கிறார். கன்னி ராசியில் உள்ள அஸ்தம், சித்திரை சந்திராஷ்டமம் உள்ளது.
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். மற்றவர்களுக்கும் உதவ முன் வருவீர்கள். பணியிடத்தில் சில மாற்றங்களைச் செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். சக ஊழியர்களுடன் சில கருத்து வேறுபாடு ஏற்படலாம். பிள்ளைகளிடமிருந்து சில ஏமாற்ற செய்திகள் கிடைக்கும். மனைவியுடன் இருக்கும் கருத்து வேறுபாடுகள் தீர்ப்பதில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்திற்கு சாதகமாக சூழ்நிலை இருக்கும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று மனிதர்களுக்கு சில நல்ல செய்திகள் கிடைக்கும். லாபம் அதிகரித்து குடும்ப மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்து விவாதிப்பீர்கள். குடும்பத்தில் மூத்தவர்களின் ஆலோசனை கிடைக்கும். இன்று வருமானத்திற்கும், செலவுக்கு இடையே சமநிலை பராமரிக்கவும். இன்று சில நிதின் அடிப்படையில் எடுக்க வேண்டியிருக்கும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று பூர்வீக சொத்து கிடைக்க வாய்ப்புள்ளது. அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் ஆசைகள் நிறைவேறும். பணியிடத்தில் பணி சுமை அதிகரிக்கும். இதன் காரணமாக கேட்டர் பிசியாக இருப்பீர்கள். காதல் வாழ்க்கையில் இனிமையான அனுபவம் கிடைக்கும். மாணவர்களின் உயர்கல்விக்குத் தடையாக இருக்கும் விஷயங்கள் விலகும். சகோதரர்கள் இருந்த உறவு சிக்கல் விலகும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம் தொடர்பாக நீண்ட தூர பயணம் செல்ல வேண்டியது இருக்கும். தேர்வுக்கு தயாராக கூடியவர்களுக்குச் சாதக காலமாக இருக்கும். ஒரே தொழில் முடிவுகள் உள்ள லாபத்தை தரும். பணியிடத்தில் உங்களின் ஆலோசனை வரவேற்கப்படும். வேற அதிகாரிகளின் ஆலோசனையும் ஆதரவும் கிடைக்கும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று அரசியலில் தொடர்புடையவர்களுக்கு இன்று தொண்டர்களின் ஆதரவு கிடைக்கும். பெற்றோர்கள் உங்களின் பிள்ளைகளின் பொறுப்பை நிறைவேற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்ப பிரச்சினைகளில் சகோதரர்களின் ஆலோசனை தேவைப்படும். வயதானவர்களுக்கு கண் சம்பந்தமான பிரச்சினைகள் அதிகரிக்கலாம். மருத்துவர்களின் ஆலோசனையை பெற்றுக் கொள்வது நல்லது. சிறு வணிகர்கள் இன்று பண பற்றாக்குறையை சந்திக்க நேரிடும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. அதனால் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக செயல்படவும். உங்களின் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. பணியிடத்தில் உங்கள் வேலையை முடிக்க கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். மாலை நேரத்தில் பெரியவர்களுக்கு சேவை செய்வதில் நேரத்தை செலவிடுவீர்கள். குடும்பத்திலும், இணையதளம் எந்த ஒரு வாக்குவாதத்தின் தவிர்ப்பது அவசியம்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இதனால் மனம் கலக்கம் ஏற்படும். அரசு வேலை தொடர்புடையவர்களுக்கு வேலையில் முன்னேற்றம் அடைவீர்கள். குடும்பத்திற்காகவும், நண்பர்களுக்காகவும் கொஞ்சம் பணம் செலவழிக்க வேண்டியது வரும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் செய்யக்கூடிய முதலீடுகள் உங்களின் செல்வத்தை அதிகரிக்க செய்யும். வியாபாரிகளுக்கு நல்ல லாபகரமான ஒப்பந்தம் கிடைக்கும். உங்களின் நிலுவையில் உள்ள வேலைகளை முடித்த கடினமாக உழைப்பீர்கள். பிள்ளைகளின் சில முக்கிய தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உங்களின் விருப்பங்களை நிறைவேற்ற மேல்வீடுகள்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்திலும், வியாபாரத்திலும் சில செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் விரும்பாவிட்டாலும் அதை செய்ய வேண்டியது இருக்கும். அதனால் உங்களின் வருமானத்தை கருத்தில் கொண்டு செலவு செய்யவும். இன்று கடன் கொடுப்பது, வாங்குவதை தவிர்க்கவும். உங்கள் மாமியார் வகையில் ஆதரவு கிடைக்கும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று தொழில், வணிகத்தில் விரும்பிய பலன்கள் கிடைக்கும். வண்டி வாகனத்தை பயன்படுத்துவதில் கவனம் தேவை. தொடர்பாக பணம் செலவாகும். காதல் வாழ்க்கையில் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.உங்கள் மனைவின் மீது கோபம் ஏற்படலாம். வேலை தொடர்பாக நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் தாயின் ஆரோக்கியத்தில் நானும் தேவை. அவர்களின் உடல் நலக்குறைவு தொந்தரவு செய்யப்படும். உங்களின் உடல் மற்றும் உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. இன்று தொடர்பான முடிவு எடுப்பீர்கள். குடும்பத்தில் உள்ள பிரச்சனையை பேசியதே தீர்த்துக் கொள்வது நல்லது. சொத்து தொடர்பாக நீங்கள் எடுக்கக் கூடிய முடிவு எதிர்காலத்தில் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு காரணமாக இருக்கும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் கடன் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். இன்று உங்களின் தொழில், வியாபாரம் தொடர்பாக பிரச்சனைகளால் சிரமப்படுகிறீர்கள். குடும்ப உறுப்பினர்களே பரஸ்பர அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் தொடர்பான விஷயங்கள் மகிழ்ச்சி தரும். குடும்பத்திற்காக நேரத்தை ஒதுக்குவீர்கள்.
Discussion about this post