ஜேர்மனியில், இந்த ஆண்டில் மட்டும், வெயில் காரணமாக இதுவரை சுமார் 3,100 பேர் உயிரிழந்துள்ளதாக ஜேர்மன்
சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை ஒன்பது மாதங்களுக்கான எண்ணிக்கை மட்டுமே. இந்த ஆண்டு இறுதியில் இந்த அறிக்கை மீண்டும்
அப்டேட் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
3,100 பேர் உயிரிழந்தாலும், ஜேர்மன் பெடரல் சுகாதாரத்துறை அமைச்சரோ, தாங்கள் அறிமுகம் செய்த வெயில்
பாதுக்காப்புத் திட்டம், உயிரிழந்தோர் எண்ணிக்கையை 4,000க்கு கீழ் கட்டுப்படுத்த உதவியதாக குறிப்பிட்டுள்ளார்.
பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என பெருமிதத்துடன் ஜேர்மன் பெடரல் சுகாதாரத்துறை
அமைச்சர் தெரிவித்துள்ளார்
உயிரிழந்தவர்களில், ஆண்களை விட பெண்கள் அதிகம் என்பதும், வயதானவர்கள் அதிக அளவில் வெப்பத்தால்
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Discussion about this post