இத்தாலி நாட்டின் ரோம் நகரில் உள்ள ஒரு தன்னாட்சி உடைய சுதந்திர நாடான வத்திக்கான் உலகில் மிகச்சிறிய நாடாக விளங்குகிறது.
இதன் மொத்த பரப்பளவு 110 ஏக்கர் மட்டுமே. 2022 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகை வெறும் 510 பேர் வசிக்கின்றனர்.
மேலும் இங்குள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா தேவாலயம் உலகில் இரண்டாவது மிகப்பெரிய கிறிஸ்துவ தேவாலயமாக உள்ளது.
உலகின் மிகச்சிறந்த ஓவியங்களும், சிலைகளும் இங்குள்ள தேவாலயங்களில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் வத்திக்கான் வங்கி என்று அழைக்கப்படும் ஐஆர் வங்கி உலகளாவிய நிதிப் பகிர்வில் அங்கம் வகிக்கிறதுடன் வாடிகன் நகரம் அதன் நாணயங்களை சொந்தமாகத் தயாரிக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்பு ஒப்பந்தம் ஒன்றின் காரணமாக 1999 ஆம் ஆண்டு முதல் அதன் நாணயமாக யூரோ பயன்படுத்தப்படுகிறது.
இங்கு வத்திக்கான் அப்போஸ்தலிக் நூலகம் (Vatican Apostolic Library) முக்கிய இடமாக உள்ளது. 75 ஆயிரம் வகைகளில் 16 லட்சம் புத்தகங்கள் இந்த நூலகத்தில் உள்ளன. 1475 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நூலகத்தில் 40 மொழிகளில் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
வத்திக்கான் நாடு யுனெஸ்கோவால் 1984 ஆம் ஆண்டு உலக பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டது.
அஞ்சல் தலை விற்பனை, சுற்றுலாப் பொருட்களின் விற்பனை, அருங்காட்சியக நுழைவுக் கட்டணம், புத்தக விற்பனை ஆகியவை வத்திக்கான் நகரத்தின் தனித்துவமான பொருளாதாரமாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post