கிளிநொச்சி மாவட்டத்தின் வட்டக்கச்சிப்பகுதியில் வசிக்கும் வினோத்தின் வேர்கள் நோக்கின் கவிதை
நூல்வெளியீட்டு விழா நிகழ்வு கரைச்சி பிரதேச சபைமண்டபத்தில் அன்றையதினம் தலைமையில் கவிதை நூல் வெளியீட்டுவிழா நடைபெற்றது.
இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு வினோத்தின் வேர்கள் வான் நோக்கின் நூலின் முதல் பிரதியினை வெளியிட்டு வைத்தார்.
இந்த நிகழ்வில் கிளிநொச்சி மத்திய கல்லுரியின் முதல்வர் திரு. பூலோகராஜா பிரதேசசபை முன்னால் உறுப்பினர்
மற்றும் நூலினை பெறவந்தவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்
இந்த நாட்டில் சட்டமில்லாத நாடாக மாறியுள்ளது ஏன் என்றால் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவனராஜா அவர்கள் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், தான் கடும் மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும் தெரிவித்து, அவர் நாட்டில் இருந்து முற்று முழுதாக வெளியேறி உள்ளார்.
நாட்டில் நீதி நியாயத்தை பெற்றுக்கொள்ள வேண்டிய ஒரே இடமான நீதிமன்றங்களே உள்ளன. நீதிபதிகளுக்கே
இந்நிலை ஏற்பட்டிருக்கிறது என்றால் சாதாரண மக்களின் நிலை என்னவாகும்?
கடந்த பாராளுமன்றத்தில் கூட சரத் வீரசேகர கருத்து தெரிவிக்கையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிதமிழ் நீதிபதி சரவணன் ராஜா வழங்கிய தீர்ப்பு தவறான எனவும் கடும் வாக்குவாதம் செய்திருந்தார். எனவே இந்த நாட்டில் தமிழ் நீதிபதிகளுக்கு பாதுகாப்பு இல்லாமல போயுள்ளது எனவும் தெரிவித்தார்
Discussion about this post