சர்வதேச நாணய நிதியத்தால் விதிக்கப்பட்ட இலக்குகளின் நோக்கங்களை இலங்கை நிறைவேற்றத் தவறியுள்ளதால் இரண்டாம் தவணைக் கடன் காலதாமதமாகலாம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுக்குழுவின் தலைவர் பீற்றர் புருவர் இதனைக் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கான இரண்டாவது தவணைக் கடன் எப்போதும் வழங்கப்படும் என்பது குறித்து நிலையான கால அட்டவணை எதனையும் தெரிவிக்க முடியாது.
நாங்கள் திருப்தியடைவதற்கு இரண்டு விடயங்கள் அவசியம் அவற்றை இலங்கை நிறைவேற்றத் தவறிவிட்டது.
நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள், கொள்கைள், சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் நாங்கள் இணக்கப்பாட்டை எட்ட வேண்டும் அதுவே நாங்கள் முன்னேறிச் செல்ல உதவும்.
அதன் மூலமே நாங்கள் திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற முடியும். ஆகவே, ஒரு விடயத்தில் ஒரு வருடத்தில் குறைபாடுகள் உள்ளதை நாங்கள் காணமுடிகின்றது. அந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முயல்கின்றோம் என்றார்.
Discussion about this post