நடிகர் தனுஷ் நடித்த முதல் பாலிவுட் படமான ‘ராஞ்சனா’வில் இரண்டாவது நாயகியாக நடித்திருந்தவர் நடிகை ஸ்வரா பாஸ்கர்.
இவருக்கும் ஃபஹத் அகமது என்பவருக்கும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. தான் கர்ப்பமாக இருக்கும் தகவலையும் புகைப்படத்துடன் ஸ்வரா பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில் ஸ்வரா – அகமது தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த தகவலை சமூகவலைதளத்தில் ஸ்வரா வெளியிட்டுள்ளார்.
மேலும் குழந்தைக்கு ’ராபியா’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Discussion about this post