இந்தியாவில் தமது உற்பத்திகளை 5 மடங்குகளாக அதிகப்படுத்தவுள்ளதாக அப்பிள் நிறுவனமானது அறிவித்துள்ளது.
அந்தவகையில் அடுத்த ஆண்டில் இருந்து 40 பில்லியன் டொலர் மதிப்பில் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாகவும், ஏயார் பொட்களையே தயாரிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.
எனினும் இந்தியாவில் iPadகள் அல்லது மடிக்கணினிகளை உருவாக்க உடனடித் திட்டம் எதுவும் இல்லை எனவும் அப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது இந்தியாவில் இருந்து ஐ போன்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக அப்பிள் நிறுவனம் மாறியுள்ளது.
இந்த நிலையில், ஐபோன் 15 சீரிஸின் விற்பனை, ஐபோன் 14 தொடருடன் ஒப்பிடும்போது 100 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post