இந்தியா – கனடா இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவை யானை என்றும், கனடாவை எறும்பு எனவும் பென்டகன் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் விமர்சித்துள்ளார்.
கனடாவை விட இந்தியாவுக்கு அமெரிக்கா அதிக முக்கியத்துவம் வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலிஸ்தான் தீவிரவாதி நிஜ்ஜார் கொலை தொடர்பாக கனடா மற்றும் இந்தியாவுக்கிடையிலான குற்றச்சாட்டு தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை பலர் எதிர்பார்த்திருந்தனர்.
இந்த நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த குற்றச்சாட்டுகளால் கனடாவுக்கே இந்தியாவை விட அதிக ஆபத்துகள் ஏற்படும் என அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை தலைமையகமான பென்டகனின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக ஜஸ்டின் ட்ரூடோ சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு எந்த விதமான ஆதாரமும் கிடையாது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Discussion about this post