பொகவந்தலாவை சென் மேரிஸ் மத்திய கல்லூரி மாணவி ஒருவர் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
தரம் பத்தில் கல்வி பயிலும் நிதர்சனா என்ற 15 வயது மாணவி 54 கிலோமீற்றர் துரத்தினை 8 மணித்தியாலம் 30 நிமிடங்களில் நடந்து சாதனை படைத்துள்ளார்.
நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் காலை 06.05 மணிக்கு ஆரம்பமான குறித்த நடைப்பயணம் கினிகத்தனை, வட்டவளை, ஹட்டன், நோர்வூட், பொகவந்தலாவ ஊடாக பிற்பகல் 2.35 மணிக்கு பொகவந்தலாவை சென் மேரிஸ் தேசிய கல்லூரியில் நிறைவடைந்தது.
குறித்த மாணவி தனது சாதனை பயணத்தை எவ்வித ஓய்வுமின்றி நடந்து சாதனை படைத்துள்ளார்.
சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீநாகவானி ராஜாவின் மேற்பார்வையில் இந்த நடைப்பயணம் இடம்பெற்றது
Discussion about this post