யாழ் மாவட்டத்திலுள்ள ஆதார வைத்தியசாலைகள் மற்றும் யாழ் போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் வைத்தியர்கள் சுகாதார பணியாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் புத்திஜீவிகள் வெளியேறுவதை தடுப்பதிலும் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு உள்ள தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்வதிலும் முறையான தீர்வுகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை தரமான மருந்துகள் அரச வைத்தியசாலைகளில் இருப்பதை உறுதிப்படுத்துவதிலும் அரசாங்கத்தின் மெத்தன போக்கை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் மதியம் 12 மணி முதல் 1 மணி வரையில் போராட்டம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post