முதன் முறையாக இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரில் இளஞ்சிவப்பு நிறம்(பிங்க்) கொண்ட துடிப்பான புறா ஒன்றை பொதுமக்கள் கண்டு ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
பிங்க் நிற புறாவை ஆச்சரியத்துடன் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதற்கு உணவுகளை வழங்கியதுடன், அந்த பிங்க் புறாவை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் பதிவேற்றி வந்துள்ளனர்.
பொதுவாக புறாக்கள் அளவில் மிக சிறியனவாகவும், வெள்ளை, சாம்பல் மற்றும் கதிர் நிறங்களிலும் அதிகமாக காணப்படுகின்றன.
ஆனால் முதல் முறையாக இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரில் இளஞ்சிவப்பு நிறம்(பிங்க்) புறா ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த புறாவின் வித்தியாசமான நிறம் மற்றும் தோற்றம் மக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
Discussion about this post