தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் சிறைச்சாலைக்கு சென்ற சில நாட்களுக்கு பின்னர் மனைவி மஹாலக்ஷ்மி தனது முதல் பதிவை போட்டுள்ளார்.
தமிழில் ‘நட்புன்னா என்ன தெரியுமா, சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் ரவீந்தர். இவரை சினிமா தயாரிப்பளராக தெரிந்ததை விட பலருக்கும் பிக்பாஸ் விமர்சகராக தான் அதிகம் தெரியும். அதுவும் வனிதா பங்கேற்ற பிக்பாஸ் சீசனில் வனிதா குறித்த இவரது விமர்சனங்கள் பெரும் பிரபலமானது.
இப்படியொரு நிலையில் இவர் கடந்த ஆண்டு சீரியல்நடிகை மஹாலக்ஷ்மியை திருமணம் செய்து கொண்டார். இது இருவருக்குமே மறுமணம் தான்.
இவர்களது திருமண செய்தி வெளியானத்தில் இருந்தே சமூக வளைத்தளத்தில் கேலிக்கு உள்ளாகி இருந்தது. இருப்பினும், அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் தங்கள் வாழ்க்கையை சந்தோசமாக இருவரும் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த சிறப்பு நாளில் உங்களைப் பற்றி நான் நிறைய எழுத விரும்புகிறேன், ஆனால் நான் தொடங்கினால், சில விஷயங்களில் என்னால் நிறுத்த முடியாது என்று நினைக்கிறேன். என் மீது நீங்கள் காட்டும் அன்பிற்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.
நம் உறவுக்கு நீங்கள் வைத்திருக்கும் மரியாதைக்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். இந்தநிலையில் தற்போது சமூகவலைதலங்களில் முழுவதும் ரவீந்தர் சந்திரசேகரன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தகவல் தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அதாவது, சென்னையை சேர்ந்த பரபரப்பை விளம்பர நிறுவனத்தின் நிர்வாகி பாலாஜி கபா. இவர் தான் ரவீந்தர் சந்திரசேகரின் மீது சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்று அளித்திருந்தார்.
அதில் அவர், ரவீந்தர் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் தொடங்கி இருப்பதாக கூறி என்னிடம் இருந்து 16 கோடி ரூபாய் மோசம் செய்து இருக்கிறார்.
பணத்தை திருப்பி கேட்டால் தரவில்லை. இதனால் ரவீந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதனை அடுத்து மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் ரவீந்தர் சந்திரசேகரனை மத்திய செய்திருந்தது. பின் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலும் அடைத்திருக்கிறார்கள்.
ரவீந்திர் சந்திரசேகர் தரப்பில் ஜாமீன் மனு வழங்கக்கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்கள்.
மேலும் அவரது மாணவி மகாலட்சுமி மற்றொரு மனுவில் அவருக்கு சிறையில் விஐபிக்களுக்கான முதல் வகுப்பு சிறை வசதி வழங்கும் படியும் மனுவில் அவர் கூறியிருந்தார்.
பின் இந்த மனுவில் விசாரித்த நீதிபதி ரேவதி அவர்கள், ரவீந்திரனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார். இவருக்கு ஜாமீன் வழங்கினால் இவர் சாட்சியங்களை கலைக்க கூடும் என்பதால் ஜாமீன் மறுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் இவருக்கு விஐபிகளுக்கான முதல் வகுப்பு சிறை வசதியும் வழங்க நீதிபதி மறுத்துவிட்டார்.ரவீந்தர் சிறைக்கு சென்ற பின்னர் மஹாலக்ஷ்மி தனது சமூக வளைதளத்தில் எந்த ஒரு பதிவையும் போடாமல் இருந்து வந்தார்.
இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சில இன்று பதிவிட்டுள்ள மகாலக்ஷ்மி. அந்த புகைப்படத்திற்கு ‘இதுவும் கடந்து போகும்’ என்று பதிவிட்டுள்ளார்.
பொதுவாக பிரபலங்கள் சிலர் பிரச்சனையில் சிக்கிவிட்டால் சில நாட்களுக்கு கமண்ட் பகுதியை முடக்கிவிடுவார்கள். ஆனால், மஹாலக்ஷ்மி விமர்சனங்களுக்கு கவலைப்படாமல் கமன்ட் பகுதியை முடுக்காமல் இந்த பதிவை போட்டுள்ளார்.
Discussion about this post