பாகிஸ்தானில் திருமண நிகழ்விற்கு மக்களுடன் சென்ற வேன் மீது லொறி மோதி மணமகன் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தகவல்வ் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணம் பாபர்லோய் பகுதியில் இருந்து ஒரு மினிவேன் புறப்பட்டது.
அதில் திருமண விழாவுக்காக மணமகன் வீட்டார் சென்று கொண்டிருந்தனர்.
கோட்கியில் உள்ள சுக்கூர்-முல்தான் நெடுஞ்சாலையில் சென்றபோது அந்த வேன் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி எதிரே வேகமாக வந்த ஒரு லொறி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து சம்பவத்தில் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த 6 பேருக்கு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பில் வழக்கு பதிந்த பொலிஸார் லொறி சாரதியை கைது செய்தனர்.
திருமணத்துக்கு சென்ற நிலையில் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Discussion about this post