கனடாவில் 2008 ஆம் ஆண்டு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நபர் உயிருடன் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கியூபெக் மேன்முறையீட்டு நீதிமன்றில் இந்த விசித்திரமான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
கடந்த 2008 ஆம் ஆண்டு ஹுசாங் இமான்பூர்சாயிட் (Hooshang Imanpoorsaid) என்ற நபர் காணாமல் போனதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த நபர் உயிரிழந்து விட்டதாக கடந்த 2017 ஆம் ஆண்டு கியூபெக் நீதவான் தீர்மானித்திருந்தார். இந்த தீர்ப்பிற்கு அமைய குறித்த நபரின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு 5 லட்சம் டாலர்கள் காப்புறுத்தி நட்ட ஈடு வழங்கப்பட்டது.
எவ்வாறு எனினும் குறித்த நபர் சென்றதாகவும் ஹம்ஸ்டடாமிற்கு சென்றதாகவும் அவர் பாரிய அளவு கடன் செலுத்த வேண்டி இருந்ததாகவும் போலீஸ் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இவ்வாறான ஒரு பின்னணியில் குறித்த நபர் உயிரிழந்தார் என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு 2021 ஆம் ஆண்டு நீதிமன்றினால் பரிசீலிக்கப்பட்டு உயிரிழக்கவில்லை என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காப்புறுதி நிறுவனம் நட்டஈட்டுத் தொகையை மீளக்கோரி இருந்தது.
நீதிமன்றம் வழியாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. குறித்த நபர் தற்பொழுது ஈரானில் வசித்து வருவதாக காப்புறுதி நிறுவனம் தெரிவித்தது.
எனினும் இந்த தமது கணவர் உயிருடன் இருப்பது குறித்த சாட்சியங்கள் இல்லை என இமான்பூர்சாயிட்டின் மனைவி டெபோரா காரல் நீதிமன்றில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் அவர் மேல் முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
தனது கணவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்குமாறு கோரியே இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். மூவரடங்கிய நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது குறித்த நபர் உயிருடன் இருப்பதற்கான சாட்சியங்கள் காணப்படுவதனால், குறித்த நபர் உயிரிழந்து விட்டதாக முன்னதாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை ரத்து செய்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
Discussion about this post