இன்று நள்ளிரவு முதல் புகையிர சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார் .
மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் விதமாக ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கிறேன் என்றும் அமைச்சர் கூறினார்.
இன்று (செவ்வாய்கிழமை) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ராகமை, ஹொரபே பகுதியில் புகையிரதத்தின் மீதேறி பயணித்த போது கீழே விழுந்து உயிரிழந்த இளைஞனின் மரணத்துக்கு இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட புகையிரத சாரதிகள் 84 பேரும் பொறுப்பு கூற வேண்டும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக பல ரயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டமையினால் குறித்த இளைஞர் புகையிரதத்தின் கூரையின் மேல் ஏறி பயணித்துள்ளார்.
இதன்போது தவறி விழுந்த அவர் ரயிலின் கீழ் பகுதியில் சிக்குண்டு 50 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டு, பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post