2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு ராஜபக்சக்களே காரணம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட தகவல்களை நான் பெரிதும் ஏற்றுக் கொள்கின்றேன்.
ஈஸ்டர் தாக்குதல் குறித்து புலனாய்வுப் பிரிவினரால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தியாவும் இதுபற்றி முன்னறிவிப்பு கொடுத்தது. அது கொடுக்கப்பட்ட போது, நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இது தெரிய வேண்டும். அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.
முன்னாள் எதிர்க்கட்சியாக இருந்த ராஜபக்சர்களும் மற்றவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். உயர்மட்ட அரசியல்வாதிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.
கர்தினால் சொல்வது சரிதான். நான் அவரை மதிக்கிறேன். ராஜபக்ச இந்த அதிகாரத்தை கைப்பற்ற முக்கிய அரசியல்வாதிகள் தெரிந்தும் இந்த அழிவை ஏற்படுத்தியதற்கும் இதற்கும் நிறைய தொடர்பு இருக்கிறதா? மற்றவர்கள் தூண்டினார்களா? யாரும் இல்லை என்று சொல்ல முடியாது.
சனல் 4 ஐ உயர்வாக ஏற்றுக்கொள்கிறேன். சில ஊடகங்கள் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றன. இது ஒரு பெரிய பிரச்சினை. இரண்டு பாதிரியார்களை சாலே நீதிமன்ற கூடுகளில் ஏற்றியதை நான் டிவியில் பார்த்தேன். நான் சாலே அவர்களுக்கு கூறுகிறேன். தவறு செய்திருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். அன்றைய அரச தலைவர்கள் ராஜபக்சர்கள் தான் இதற்கு பொறுப்பு என குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post