கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களைச் செய்து நாட்டை விட்டு தப்பிச் சென்ற 148 பாரிய பாதாள உலகக் குற்றவாளிகளைக் கைது செய்ய இன்டர்போல் சிவப்பு அறிவித்தலை விடுத்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
இதனை திறந்த மற்றும் பொறுப்புமிக்க அரச துறைசார் கண்காணிப்புக்கான நாடாளுமன்றக் குழுவில் குற்றவியல் மற்றும் சட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்ட தெரிவித்தார்.
திறந்த மற்றும் பொறுப்புமிக்க அரச துறைசார் கண்காணிப்புக்கான நாடாளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழு, நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி தலைமையில் இடம்பெற்றபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர்கள் வேறு நாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில், இலங்கை பொலிஸாரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய சர்வதேச பொலிஸார் இந்த சிவப்பு அறிவித்தல்களை பிறப்பித்துள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர்களில் சிலர் ஏற்கனவே இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இந்தியாவில் 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
Discussion about this post