கனடாவின் றொரன்டோவில் அமைந்துள்ள தேவாலயமொன்றில் குண்டுவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானதால் மக்கள் அச்சமடைந்திருந்தனர்.
ரொறன்டோவின் நோர்த் யோர்க் பகுதி தேவாலயம் ஒன்றில் குண்டு வைக்கப்பட்டதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து மக்கள் பதற்றமடைந்தனர்.
இருப்பினும், பொலிஸார் மேற்கொண்ட சோதனைகளின் பின்னர் இந்த தகவல் ஓர் போலியான தகவல் என்பது தெரிய வந்துள்ளது.
பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தனர். இந்த குண்டு தொடர்பான தகவல் வெளியான போது தேவாலயத்திற்குள் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது பற்றிய விபரங்களை பொலிஸார் வெளியிடவில்லை.
எவ்வாறெனினும் குறித்த தேவாலயத்திற்குள் இருந்த பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தின் போது எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. நீண்ட தேடுதல் மற்றும் விசாரணைகளின் பின்னர் எவ்வித குண்டும் கிடையாது எனவும் ஆபத்து இல்லை எனவும் பொலிஸார் அறிவித்திருந்தனர்.
Discussion about this post