கனடாவின் St. Thomas நகரில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Earthquakes Canada வெளியிட்ட தகவலின்படி ஞாயிறு இரவு உள்ளூர் நேரப்படி 10:30 மணியளவில் ஒண்டாறியோவின் St. Thomas நகரில் 4.3 ML magnitude அளவில் நிலநடுக்க உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன், செயின்ட் கேத்தரின், இங்கர்சால் மற்றும் போர்ட் கோல்போர்ன் உள்ளிட்ட பகுதிகளிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்த செய்தியை பலரும் சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளனர். லேசான அளவிலான நிலநடுக்கம் என்ற காரணத்தினால் சேதமோ, காயமோ எதுவும் ஏற்படவில்லை.
Discussion about this post