அரசாங்கம் புதிதாக நடைமுறைப்படுத்தியுள்ள அஸ்வெசும திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு முதல்
கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் பயனாளிகளுக்கு முதற்கட்டமாக உதவித்தொகை வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
வங்கிகளில் கணக்கை ஆரம்பித்த பயனாளிகளுக்கு அரசு வங்கிகள்
மூலம் பணம் வழங்கப்படும்.
இந்தநிலையில் தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள 15 இலட்சம் அஸ்வெசும பயனாளிகளுக்கு மத்தியில் உண்மையான தகவல்கள் உறுதி செய்யபட்ட 8 இலட்சம் பயனாளிகளுக்கு
ஜூலை மாதத்திற்கான பணத்தை இன்றைய தினம்
வங்கிகளில் வரவு வைப்பதற்கு நலன்புரி நன்மைகள் சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக நிதி இராஜாங்க
அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, செவ்வாய்க்கிழமை (29.08.2023) முதல் பயனாளிகள் வங்கிகளில் பணத்தினை பெற முடியும் என
தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
Discussion about this post