தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் செல்வராகவன்.
இவரும் நடிகை சோனியா அகர்வாலும் கடந்த 2006ல் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் 2010ல் பிரிந்தனர்.
இந்த நிலையில் சொந்த வாழ்க்கை குறித்து அண்மை பேட்டியில் சோனியா அகர்வால் மனம் திறந்துள்ளார்.
அவர் கூறுகையில், “இயக்குனர் செல்வராகவன் முரட்டுப்பிடிவாதம் கொண்டவர். ஆனால் சொந்த வாழ்க்கையில் அப்படி இல்லை. அமைதியானவர்.
எங்களின் திருமண வாழ்க்கை ஏன் முறிந்தது என்பது எனக்கும், அவருக்கும் மட்டுமே தெரியும்.
கணவன்-மனைவியாக இருந்து பிரிந்தவர்கள் நண்பர்களாக தொடர்வது முடியாத காரியம்.
அவர் என் கண்களுக்கு நண்பராக தெரியமாட்டார். காதல் செத்துப்போன பிறகு சினேகிதராக பார்க்க முடியாது.
வாழ்க்கையில் மறுபடியும் அவர் முகத்தை பார்க்க மாட்டேன்.
திருமணமான புதிதில் நான் நடிக்கக்கூடாது என்று அவரது குடும்பத்தினர் நிர்ப்பந்தித்தனர். அதனால் சினிமாவை விட்டு ஒதுங்கிய நான் விவாகரத்துக்கு பின்னர் மீண்டும் நடிக்க தொடங்கினேன்” என கூறியுள்ளார்.
Discussion about this post